படிக்கத் தெரியாத மாப்பிளை.. அதிரடியாக திருமணத்தை நிறுத்திய குஷ்பு !

ஆக்ரா அருகே உள்ள கிராமம் உள்ள ஒன்றில் நடைபெறவிருந்த திருமணத்தில், பத்து வரை சரியாக எண்ணத் தெரியாத மக்கு மாப்பிளையை உதறித்தள்ளி மணமகள் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு அருகில் அமைந்துள்ள கிராமம் குலாரியபுர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா பாபு சக்சேனா. இவரது மகள் குஷ்பு. இவருக்கும் ஒரிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓம்வீர்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமேடையில் ஐயர் ஓதிய மந்திரத்தை தப்பும் தவறுமாக உளறி உள்ளார் மாப்பிள்ளை ஓம்வீர், இதனை மணமகள் குஷ்புவிடம் அவரது தோழிகள் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து மணமேடைக்கு வந்த குஷ்பு, மாப்பிள்ளை ஓம்வீரிடம் சில ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து எண்ணுமாறு கூறியுள்ளார். 

ஒன்று, இரண்டு, மூன்று என எண்ண ஆரம்பித்த அவருக்கு ஒன்பதுக்கு அப்புறம் எண்ண தெரியவில்லை. ஓம்வீருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்த குஷ்பு. ஒம்வீர் மொபைலில் இருந்து தன் மொபைலுக்கு நம்பரை அழுத்தி கால் செய்யுமாறு கூறினார். 

ஓம்வீர் ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க உடனடியாக திருமணத்தை நிறுத்தினார் குஷ்பு. ஒம்வீர் பெற்றோர்கள் குஷ்புவை எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து விஷயம் பஞ்சாயத்து வரை சென்றது. ஒம்வீர் படிக்காத காரணத்தினால், மாப்பிள்ளை பார்க்க சென்றபோது ஓம்வீரிடம் பேசுவதற்கு அவரது குடும்பத்தினர் தடை விதித்தது பின்னர் தெரியவந்தது. 

எட்டாம் வகுப்பு படித்துவிட்டு , மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி படிக்க குஷ்பு எண்ணியிருந்த நிலையில் தான் அவருக்கு இந்த திருமண ஏற்பாடு நடந்தது.
Tags:
Privacy and cookie settings