தாய் - தந்தையை ஒன்று சேர்த்து வைக்க குழந்தைகள் நடத்திய நாடகம் காரணமாக ஈரோடு மாவட்டம், கோபி காவல் நிலையத்தில் நடந்த உருக்கமான பாசப் போராட்டம் அங்கிருந்த வர்களின் மனதை நெகிழ வைத்தது.
பெற்ற மனம் கல்லாகவும், பிள்ளை மனம் பித்தாகவும் மாறிய நெஞ்சை நெகிழ வைத்த பாச சம்பவம் பற்றிய விவரம்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிர வெளி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (38). தனியார் பேருந்து டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (31).
இவர்களுக்கு மணி கண்டன் (12), சுதர்சன் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மணி கண்டன் ஈரோடு மாவட்டம் விஜய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் 7-ம் வகுப்பும், சுதர்சன் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
செந்திலுக்கும், அவருடைய மனைவி இந்து மதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
எனவே மணி கண்டனும், சுதர்சனும் செந்திலின் தாய் பாப்பாத்தி பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.
இந்த நிலை யில் செந்தில், தனது தாய் பாப்பாத்தி, 2 மகன் களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தி ருந்தார்.
இந்த நிலை யில் செந்தில், தனது தாய் பாப்பாத்தி, 2 மகன் களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தி ருந்தார்.
கடந்த 14-ம் தேதி உறவினர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சுதர்சனை திடீரென்று காணவில்லை.
இது குறித்து கோபி காவல் நிலைய த்தில் செந்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவ ர்கள் 2 பேரையும் கடந்த 7 நாட்களாக வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே தன்னுடைய 2 மகன்களும் மாயமான செய்தி அறிந்ததும் அவர்களுடைய தாய் இந்துமதி அழுது புலம்பினார். பின்னர் தன் னுடைய மகன்களை அவரும் பல இடங்களில் தேடி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி நள்ளிரவு செந்திலை அவ ருடைய மூத்த மகன் மணி கண்டன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினான்.
அப்போது தானும், தம்பி சுதர்சனும் பெருந் துறையில் உள்ள பள்ளிக்கூட நண்பன் ஒருவர் வீட்டில் பத்திரமாக தங்கி இருப்பதாக கூறினான்.
21-ம் தேதி காலை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டு செல்போனை துண்டித்து விட்டான். உடனே செந்தில் இதுகுறித்து கோபி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் மறுநாள் (21-ம் தேதி) காலை செந்தில் மற்றும் கோபி காவல் துறையினர் பெருந்துறைக்கு சென்று மணிகண்டன் மற்றும் சுதர்சனை மீட்டு கோபி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுவர் களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவன் மணிகண்டன் காவல் துறையினரிடம் கூறுகையில், அப்பா, அம்மா மீது எங்களுக்கு அதிக பாசம் உண்டு.
ஆனால் அவர்கள் சிறு சிறு குடும்ப பிரச்னைகளுக்காக அடிக்கடி சண்டையிட்டனர். இது எங்களுக்கு பிடிக்க வில்லை.
எங்களால் அவர்களுடைய சண்டையை சமாதானம் செய்ய முடிய வில்லை. இந்த நிலையில் அப்பாவிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக அம்மா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
எங்களுக்கு அம்மாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவே பிரிந்திருக்கும் அம்மா, அப்பாவை ஒன்று சேர்த்து வைக்க நானும், தம்பி சுதர்சனும் நினைத்தோம்.
இதற்காக நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனது போன்று ஒரு நாடகம் நடத்துவோம்.
அப்போது கண்டிப்பாக அம்மாவும், அப்பாவும் நம்மை தேடும் போது ஒன்று சேர்ந்து விடுவார்கள். பின்னர் 2 பேரும் வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த நிலையில் கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றோம். விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்த நாங்கள் பெருந்துறையில் உள்ள என் பள்ளிக் கூட நண்பன் வீட்டுக்கு சென்றோம்.
அங்கு என் நண்ப னிடம் நடந்த விவரத்தை கூறினேன். அப்பா மற்றும் அம்மாவை சேர்த்து வைப்பது நல்ல விஷயம் தானே…
என்னுடைய வீட்டில் தங்கிக் கொள்! என்று என் நண்பன் கூறியதுடன், அவனுடைய பெற்றோரிடமும் ஒப்புதல் வாங்கி விட்டான். இதனால் நாங்கள் துணிச்சலாக என் நண்பன் வீட்டில் தங்கி விட்டோம்.
நாங்கள் காணாமல் போய் 7 நாட்கள் ஆகி விட்டதால் அம்மாவும், அப்பாவும் கண்டிப்பாக சேர்ந்தி ருப்பார்கள் என்று நினைத்தேன்.
எனவே என் அப்பாவுக்கு நான் போன் செய்தேன். இதற்கிடையே நீங்கள் வந்து எங்களை பிடித்து விட்டீர்கள் என்று தெரிவித்தான்.
உடனே கோபி காவல் துறை ஆய்வாளர் (பொறுப்பு) சண்முகம், உதவி ஆய்வாளர் நாகலட்சுமி ஆகியோர் செந்தில் மற்றும்
உடனே கோபி காவல் துறை ஆய்வாளர் (பொறுப்பு) சண்முகம், உதவி ஆய்வாளர் நாகலட்சுமி ஆகியோர் செந்தில் மற்றும்
அவருடைய மனைவி இந்துமதி ஆகிய 2 பேரையும் அழைத்து குடும்ப நல ஆலோசனை வழங்கினர்.
அப்போது அவர் களிடம், ‘உங்களுடைய பிரிவு, உங்கள் 2 மகன் களின் மனதையும் மிகவும் பாதித்து விட்டது. தாய், தந்தை பாசத்துக்காக உங்கள் மகன்கள் 2 பேரும் ஏங்கி உள்ளனர்.
பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் எதிர்ம றையாக பெத்த மனம் கல்லு. பிள்ளை மனம் பித்து என நீங்கள் 2 பேரும் நடந்து உள்ளீர்கள்.
ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காமல் உங்க ளுடைய வறட்டு கவுரவ த்தால் 2 குழந்தை களையும் பற்றி கவலைப் படாமல் மனதை கல்லாக்கி கொண்டு, நீங்கள் 2 பேரும் பிரிந்து விட்டீர்கள்.
நடந்தது நடந்ததாக இருக் கட்டும். இனி மேலாவது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்து 2 பேரும் ஒற்றுமையாக குடும்பம் நடத்துங்கள் என்று காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.
இதனை 2 பேரும் ஏற்றுக் கொண்டதுடன், இனிமேல் எந்த நிலையிலும் 2 பேரும் பிரிய மாட்டோம் என உறுதி அளித்து, தங்களு டைய 2 மகன் களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
இதை கேட்டதும் சந்தோஷத்தில் அங்கு நின்று கொண்டிருந்த மணி கண்டன் காவல் துறையினரை பார்த்து, ‘எங்களுடைய அப்பா, அம்மாவை சேர்த்து வைத்ததற்கு ரொம்ப நன்றி‘ என்று கூறினான்.
இதனை கேட்டதும் அங்கிருந்த காவல் துறையினர் மற்றும் மணி கண்டனின் பெற்றோர் கண்கள் உணர்ச்சியால் கலங்கியது.
அது மட்டுமின்றி காவல் நிலையத் துக்கு வழக்கு சம்பந்தமாக வந்த மற்றவர்களும் 2 குழந்தை களின் உருக்கமான உணர்வுப் பூர்வமான பாசப் போராட்டத்தை கண்டு மனம் நெகிழ்ந்தனர்.
Tags: