நீரிழிவு நோய்க்கு மருந்தாக செயற்படும் இலவங்க பட்டை !

கறுவாப்பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டை நீரிழிவு நோய்க்கு மருந்தாக செயற் படுகின்றது. இது நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் அதிகம் சேர்கிறது. 

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். 

இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப் பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். 

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத் தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். 

எமது அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப் பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். 


இருமல், இழுப்பு சளித்தொல்லை, வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாக்கும் வல்லமை கொண்டது இலவங்கப்பட்டை. 

விஷக்கடி, சிலந்திக்கடி ,விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். 

இந்த நேரங்களில் இலவங்கப் பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடியாக அரைத்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும். 

பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு இலவங்கப் பட்டை காயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப் போக்குள்ள பெண்களு க்கும் இது சிறந்த மருந்து.
Tags:
Privacy and cookie settings