நன்னாரி என்ற தாவரம் நம் நாட்டின் இயற்கை மூலிகைகளில் ஒன்று, அதன் வேருக்கு உடலைக் குளிர்ச்சி யாக்கும் ஆற்றல் உள்ளதென்று சித்த, மருத்துவம் சொல்லகிறது.
‘சலதொடம் பித்தமதி தாகம் உழலை சலேமேறு சீதமின்னார் தஞ்சூடு லகமதிற் சொன்னமது மேகம் புண் சுரமிவை யெலாமொழிக்கும் மென்மதுர நன்னாரி வேர்’ என்கிறது அகத்தியர் குணபாடம்.
நன்னாரியின் வேரை நீரில் உறவைத்து வடிகட்டிக் குடிப்பது உடல் உஷ்ணம் தணிக்க நம் முன்னோர் கையாண்ட முறை, வேர் ஊறிய நீரைக் குடிப்பது சுவைக்காது என்பதால் சர்க்கரை பாகுடன் கலந்து சுவை கூட்டினர்.
அதுவே நன்னாரி சர்பத் என்று சந்தையில் விற்பனை யாகிறது. இந்த சர்பத்துடன் எலுமிச்சை பழசாறும் நீரும் கலந்து நன்னாரி சர்பத் என்ற பெயரில் பெட்டிக் கடைகளில் கோடை காலங்களில் விற்பது வழக்கம்.
நன்னாரி பசியைத் தூண்டும், வெம்மையைத் தணிக்கும். உடம்பிற்கு குளிர்ச்சியை ஊட்டும். சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.
தலைவலி, தலை சூடு ஆகியவை குணப்படும். உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து இருக்கிறது.
முன்பெல்லாம் கோடை வந்து விட்டாலே சர்பத் கடைகளும் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கி விடும்.
அந்தக் கடைகளில் எல்லாம் நன்னாரிசர்பத் வியாபாரம் பிய்த்துக் கொண்டு நடக்கும். வந்தேறி குளிர் பானங்களான coke, pepsi தயாரிப்புகள் இந்தக் கடைகளில் நிரம்பத் தொடங்கிய பின் நிலைமை தலைகிழாய் மாறிப் போனது.
உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காத நன்னாரி சர்பத்தை கைவிட்டு விட்டு பூச்சிக் கொல்லிகளுக்கு இணை யான கோக்கோ கோலவையும் பெப்சியை யும் தேடி மக்கள் ஓடினர்.
நன்னாரி சர்பத்துகள் இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போய் கொண்டிருக் கின்றன.