பெண்ணை கல்லெறிந்து கொல்ல தீர்ப்பு !

இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணை கல்லெறிந்து கொல்ல தீர்ப்பு !
கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணொரு வருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பை சவூதி அரேபிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அவருடன் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததாக கூறப்படும் விவாகமாகாத பிறிதொரு இலங்கை இளைஞருக்கு 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப் பட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விசாரணைகள் சவூதி நீதிமன்றில் இடம் பெற்ற போது இலங்கை பெண் தான் குறித்த இளைஞருடன் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். 

குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 
பெண்ணை கல்லெறிந்து கொல்ல தீர்ப்பு !
எவ்வாறாயினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய அவகாசம் உள்ள நிலையில், மேன்முறை யீட்டினைச் செய்து தேவையான சட்ட உதவிகளை வழங்கி குறித்த 

பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க அல்லது ரத்துச் செய்ய சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்

அதற்கான ஆலோசனைகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்து கோரளவின் ஆலோசனை தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள தாகவும் அறிய முடிகின்றது.
Tags:
Privacy and cookie settings