சென்னை புறநகர் பகுதிகளில் நீர் வழிப் பாதைகளை ஆக்ரமித்து கட்டப்பட்ட இடங்களை அகற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து ள்ளனர்.
கடந்த வாரம் பெய்த கனமழை, வெள்ளத்தால் சென்னையின் புற நகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.
செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளி யேற்றப்படும் பாதைகள் ஆக்ரமிக்கப் பட்டதே கடுமையான பாதிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.
இதை யடுதது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிக்குழுத் தலைவர் அமுதா தலைமையிலான அதிகாரிகள், முதற்கட்டமாக அடையாறு ஆற்ற ங்கரைப் பகுதிகளான முடிச்சூர்,
வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பெரியார் சமத்து வபுரம் போன்ற பகுதிகளில், ஆக்ரமிக்கப்பட்ட உபரி நீர் செல்லும் பாதையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பெரியார் சமத்து வபுரம் போன்ற பகுதிகளில், ஆக்ரமிக்கப்பட்ட உபரி நீர் செல்லும் பாதையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை இடித்து தள்ளி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்