வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு பெண் புகட்டிய பாடம் !

கேரளாவை சேர்ந்த ரெம்யா ராமச்சந்திரன் என்பவர் மாப்பிள்ளை வீட்டார் வரதட் சணை கேட்டதால் தன் திருமணத்தையே ரத்து செய்துள்ளார். மேலும் இது குறித்து இவர் சமூக வலை தளங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்று தீயாக பரவி வருகின்றது.
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு பெண் புகட்டிய பாடம் !
கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்த ரெம்யா வசிப்பது கோவாவில். இவர் தனது முகநூல் பதிவில், "நிச்சயதார்த் தத்துக்கு பிறகுதான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை பேச்சை ஆரம்பி த்தனர்.

நிச்சயதார்த் தத்துக்கு முன்பு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிய மாப்பி ள்ளை வீட்டார் நிச்சயதார் த்தத்திற்கு பிறகு 50 பவுன் நகையும், ஐந்து லட்சம் ரொக் கமும் கேட்டனர்.

இப்படியான ஒரு நம்பகத் தன்மையற்ற ஆணை திருமணம் செய்வதும் இவ்வாறான ஒரு குடும்பத்துக்கு மரு மகளாக செல்வதும் எனக்கு தான் பெரும் இழப்பாக இருக்கும். 

அதனால்தான் இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என முடி வெடுத்தேன்" என கூறியு ள்ளார். இவர் எழுதியிருக்கும் அந்த பதிவிற்கு ஏராளமானோர் பேர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
இதன் பிறகு இவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்த நிகழ்வை தனி மனித தாக்குதலுக்கு பயன் படுத்தாமல் சமூகத்தில் நிலவும் வரதட்சணை மாதிரி யான கொடுமைகளுக்கு எதிராக பயன் படுத்துமாறு வேண்டுகோள் விடுத் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings