ரஷ்ய மருத்துவமனையில் தீ 23 பேர் பலி

ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில், வேரோனேழ் மாகாணத்தில் உள்ள அல்பெரோவ்கா என்ற கிராமத்தில் மனநல மருத்துவமனை அமைந்துள்ளது.

சனிக்கிழமை இரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரங்களால் கட்டப்பட்ட மருத்துவமனை என்பதால் கொழுந்துவிட்டு எரிந்த தீ, வெகுவேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுமார் 440 தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 

படுகாயமடைந்த 20 பேர் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்ய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings