காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடித்தால் இதய நோய் தாக்கும் !

எமக்கு உடல் களைப்போ சோர்வோ ஏற்படும் வேளைகளில் குளிா் பானங்கள் குடிப்பது வழக்கம். ஆனால் நாம் அருந்தும் காஸ் நிரப்பப் பட்ட குளிர் பானங் களால் இதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று தொிவிக்கின்றது. 

 காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம்


இதுதொடர்பாக சுவீடன் நாட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. 12 வருடங்களாக தொடர்ந்து தினமும் காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடிக்கும் 42 ஆயிரம் போ் ஆய்வுக் குட்படுத்தப் பட்டனர்.

அவர்களுடைய இதய செயல்பாடுகள் பரிசோதிக்கப் பட்டதில் பெரும்பாலா னோருக்கு இதயம் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

இதன் மூலம் காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடித்தால் இதய நோய் தாக்கும் என கண்டறிந் துள்ளனர். 

இவற்றை அருந்துவதால் 23 சதவீதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings