பழைய ரேஷன் கார்டுகளையே பயன்படுத்த அரசு உத்தரவு !

தமிழகம் முழுவதும் 2016ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்பில்லை. பழைய கார்டு களையே 2016ம் ஆண்டும் உபயோகப் படுத்த தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
பழைய ரேஷன் கார்டுகளையே பயன்படுத்த அரசு உத்தரவு !
தமிழகத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டு களுக்கும் ஒருமுறை புதிய ரேஷன் கார்டு வழங்கப் பட்டு வந்தது. அதன்ப டி கடைசியாக 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப் பட்டது.

இந்த கார்டை 2009ம் ஆண்டு வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். 2010ம் புதிய ரேஷன் கார்டு வழங்கி இருக்க வேண்டும். 

ஆனால், ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்ட் (மின்னணு அட்டை) வழங்கலாம் என்ற ஆலோசனை யின் அடிப்படை யில் புதிய ரேஷன் கார்டு வழங்காமல்,

பழைய ரேஷன் கார்ட்டில் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 2015ம் ஆண்டு வரை, அதாவது 6 ஆண்டுகளாக உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வருகிறது.

இதனால் தற்போதுள்ள 1 கோடியே 99 லட்சத்து, 97 ஆயிரம் ரேஷன் கார்டுகளும், பழைய பேப்பராகி கிழிந்து தொங்கும் பரிதாப நிலையில் உள்ளது. 
ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கணக் கெடுப்பின்படி மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 4 ஆண்டு களாக கூறி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட வில்லை. 

இந்நிலையில், 2016ம் ஆண்டாவது பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய ரேஷன் கார்டு அல்லது மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க ப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தி ருந்தனர். 

ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 2016ம் ஆண்டும் பழைய ரேஷன் கார்டில் காலியாக உள்ள உள்தாளை 2016ம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தற்போது அறிவித் துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் நேற்று அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: 

தற்போது நடை முறையில் உள்ள ரேஷன் கார்டுகளை, ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணினி தொகுப்பை அடிப்படை யாக கொண்டு மின்னணு குடும்ப அட்டையாக வழங்க திட்ட மிடப்பட்டது. 

மேலும் பொது விநியோக திட்டத்தை முழு கணினி மயமாக்கும் திட்டத் துடன் ஒருங் கிணைத்து புதிய குடும்ப அட்டைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என கருதப் படுகிறது. 

தற்போது 2016ம் ஆண்டு இறுதி வரை, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெறத்தக்க வகையில் உள்தாள்கள் ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ளது.

அதனால் ரேஷன் கார்டு செல்லத் தக்க காலத்தை 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப் படுகிறது. 

ஆண்டு குறிப் பிடாமல் உள்ள உள்தானை பொதுமக்கள் பயன்படுத்தி ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings