வீடுகள் மற்றும் கோவில்களில் பயன் படுத்தப்படும் ஊது பத்திகளி லிருந்து வெளியேறும் புகையை சுவாசிப் பவர்களுக்கு சிகரெட் பிடிப்போருக்கு ஏற்படும் பாதிப்பு களுக்கு இணையான பாதிப்புகள் ஏற்படும் என புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஊதுபத்தி பயன்பாடு என்பது நீண்டதொரு வரலாற்றைக் கொண்டது. ஆன்மீகப் பண்பாட்டில் ஊதுபத்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், வாசனையை வெளிபடுத்தும் ஊதுபத்திகளின் புகையினால் அபாயகரமான கேடு விளையக்கூடும் என சீன பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அகிலம், சந்தன மரம் போன்றவற்றின் தூள்களைக் கொண்டு ஊதுபத்திகள் தயாரிக்கப் படுகின்றன.
மேலும் ஊதுபத்திகள் தயாரிப்பில் சுமார் 64 வகையான மூலப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இவற்றில் இரண்டு வகையான மூலப் பொருட்கள் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என இந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன், விலங்குகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் ஊதுபத்தியின் இரசாயனக் குணங்களால் DNA உள்ளிட்ட மரபு ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுவ தாகவும் இதனால் பாதிப்புகள் அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தென் சீன பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம், ஊதுபத்திகளில் உள்ள ஜெனோ டொக்சின்ஸ் மற்றும் சைட்டோ டொக்சின்ஸ் ஆகிய நச்சுப் பொருட்கள் புற்றுநோயை விளைவிக்க கூடியவை எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவு சுற்றுச்சூழல் மற்றும் வேதியியல் ஆய்வுக் கூறுகளை வெளியிடும் ஸ்ப்ரிங்கர் என்ற இதழில் வெளியாகியுள்ளது.