இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது.
2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்த போது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கி விற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் காலத்தை பெப்ரவரி 15இல் ஆரம்பிப்பார்.