ஒருபுறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் தங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொடுத்து டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெள்ளத் தால் கடுமை யாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனித நேயத் துடன் தாமாக முன்வந்து பல்வேறு தொண்டு நிறுவனங் களும், தனி நபர்களும் உதவிகளை செய்து வருகி ன்றனர்.
ஆனால் இந்த பொருட்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ஒரு சிலர் மது வாங்கி குடிப்பதாக குற்றச் சாட்டு எழுந் துள்ளது.
இதனால் தாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்து ள்ளதாக கூறுகி ன்றனர் உதவிக்கரம் நீட்டியவர்கள்.
ஆனால் இந்த குற்றச் சாட்டை முற் றிலுமாக மறுக்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.
தாங்கள் ஒரு போதும் இது போன்ற செயலில் ஈடுபடுவதில்லை என்றும், ஒரு சிலரால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
யாரோ சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடு வதால் உண்மையாக பாதிக்கப் பட்டவர்களு க்கு சென்று சேரும் உதவி தடைபட வாய்ப்புள் ளதையும் சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.