ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னா் உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ பிரச்னைகளில், மூட்டு வலியும் ஒன்று. இது சில வேளைகளில் மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.
இந்த மூட்டுவலிக்கு இயற்கை அளித்த கொடைதான், சந்தி முத்திரை. தளர்வான மற்றும் இறுக்கமான மூட்டுகளுக்கு நிவாரணம் அளித்து அவற்றை உறுதியாக்கும் வேலையை சந்தி முத்திரை செய்கிறது.
நாற்காலியில் அமர்ந்து, இரண்டு பாதங்களையும் தரையில் ஊன்றிச் செய்யலாம். இயன்றவர்கள் சப்பணக்கால் போட்டு அமர்ந்தும் செய்யலாம்.
யோகா செய்து பழகியவர்கள் வஜ்ராசனத்தில் செய்தால், சிறந்த பலன் பெற முடியும். வெறும் வயிற்றிலோ அல்லது உணவு உண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்னரோ செய்யலாம்.
முத்திரையை 20 – 45 நிமிடங்கள் வரை செய்யலாம். பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிபடுவோர், ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஓய்வு நேரத்திலும் செய்யலாம்.
செய்யும் முறை :
வலது கை – பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை – பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங் களைக் குறைக்கும். மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம்.
அதிக தூரம் நடப்பவர்கள், நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்கள் போன்றோர் சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும்.
இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.
வஜ்ராசனத்தில் செய்துவந்தால், 60 வயதில்கூட மூட்டு வலி வராமல் தடுக்க முடியும். தரையில் உட்கார முடியாதோர், வயோதிகத்தால் அன்றாட வேலை களைச் செய்ய முடியாமல் தவிப்போர், இந்த முத்திரையைச் செய்யலாம்.