குப்பைகளை அகற்ற வீதியில் களமிறங்கிய வைகோ, திருமா, முத்தரசன் !

வெள்ளத்தில் சிக்கி கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ள சென்னை நகரையும், மக்களையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எராளமானோர் ஈடுபட்டுள்ளனர். 
குப்பைகளை அகற்ற வீதியில் களமிறங்கிய வைகோ, திருமா, முத்தரசன் !
ுப்புரவு பணியில் ஆயிரக்க ணக்கான பணியா ளர்கள் மட்டுமல்லாது தன்னார் வலர்களும், அரசியல் கட்சியி னரும் ஈடுபட் டுள்ளனர்.
 
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மக்கீஸ் கார்டனில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள். 
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பெய்த மழை வெள்ளத்தால் ஏரிகள் நிரம்பி, திறந்து விடப்பட்ட உபரி நீர் கூவம், அடையாறுகளில் பெருகிறது.

இதனால் ஆற்றின் கரையார மக்களை அதிகம் பாதிக்கப் பட்டனர். குடியிரு ப்புகள் மூழ்கின. சென்னையே குப்பை நகரமாகி விட்டது.

இந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான தன்னார் வலர்கள், நடிகர், நடிகையர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
பொது மக்களும் அவரவர் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற வீதியில் களமிறங்கிய வைகோ, திருமா, முத்தரசன் !
இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.இராம கிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு

சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினர். 
 
இந்த நிலையில் நிவாரண பணிகளுக்குப் பின்னர்  இன்று 12.12.2015 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் பகுதியில் குப்பைகளை அகற்றி னார்கள். 

தொடர்ந்து அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபட உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings