8000 கிலோ எடை கொண்ட லட்டு நிறுவனத்துக்கு கின்னஸ் விருது !

விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்தி ராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவன த்துக்கு கின்னஸ் விருது வழங்கப் பட்டுள்ளது.
8000 கிலோ எடை கொண்ட லட்டு நிறுவனத்துக்கு கின்னஸ் விருது !
அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்த தற்காக அந்நிறு வனம் தொடர்ந்து ஐந் தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற் றுள்ளது.

ஆந்திரா வின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியை யொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரி த்தது.

இந்நிலை யில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்த தற்காக அந்நிறுவ னத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்ப ட்டுள்ளது. 

அந்த விருது சான்றி தழில், ”2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்க டேஸ்வர ராவ் என்பவ ருக்கு சொந்த மான ஆந்திரா வின் தாபேஸ் வரம் நகரில் உள்ள

ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவன அதிக எடை கொண்ட லட்டு (8,369 கிலோ) தயாரித்துள்ளது” என குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய வெங்கடேஸ்வர ராவ், கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது எங்களது நிறுவனம் சார்பில் 8,000 கிலோ மற்றும் 6,000 கிலோ எடை கொண்ட இரு மகா லட்டுகள் தயாரிக்கப்பட்டு,
விசாகப்பட்டிணம் மற்றும் விஜயவா டாவில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு படைக்கப் பட்டன என்றார். 

ஏற்கெனவே கடந்த 4 நான்கு ஆண்டு களாக அதிக எடையுள்ள லட்டு களை தயாரித்ததற்காக கின்னஸ் விருது பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வரும் காலத்தில் 500 கிலோ எடை கொண்ட பால்கோவா தயாரித்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா சந்நிதானத்தில் படைக்கப்படும் என்றார் வெங்கடேஷ்வர ராவ்.
Tags:
Privacy and cookie settings