முஸ்லிம் என்பதால் பஸ்ல இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் !

1 minute read
பிரித்தானியாவில் முஸ்லிம் என்பதால் நபர் ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. சொமாலியா நாட்டை சேர்ந்தவரான இப்ராகிம் இஸ்மாயில் (41) குடியுரிமை பெற்று கடந்த 2000 ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகிறார். 
முஸ்லிம் என்பதால் பஸ்ல இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் !
இவர் அங்குள்ள திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கண் பரிசோதனை செய்து கொள்வதற்காக அவர் லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார்.

எனவே பிரிஸ்டொலில் நேசனல் எக்ஸ்பிரஸ் பேருந்தில் தனது உடமைகளுடன் அவர் ஏறியுள்ளார். அப்போது, அவரின் தோற்றத்தை பார்த்த மாணவி ஒருவர் அசவுகரியமாக உணர்ந்துள்ளார்.

மேலும் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விடுமாறு ஓட்டுனாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பேருந்தில் இருந்து இறங்க கட்டாயப் படுத்தப் பட்டுள்ளார். இதனால் அவர் மிகவும் ஆத்திர மடைந்துள்ளார்.
எனினும் அதை வெளிப் படுத்தாமல் அமைதியாக பேருந்தை விட்டு அவர் கீழே இறங்கி யுள்ளார். இது தொடர்பாக இஸ்மா யில் கூறிய தாவது, நான் பேருந்தில் ஏறிய போதே அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.  

பின்னர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக என்னை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். அங்கு மேலும் சில கருப்பர்கள் இருந்தனர். எனினும் அவர்களை எதுவும் கூறவில்லை. இது பாகுபாடு இல்லையா என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அவர் அளவுக்கு அதிகமாக உடமைகளை வைத்தி ருந்ததால் தான் அவர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக நேட்சனல் ஏக்ஸ்பிரஸ் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கணவருக்கு முடிவெட்டிய விட்ட பாலிவுட் நடிகை.. வைரலாகும் வீடியோ !
எனினும் மத வேறுபாடு காரணமாகவே அவர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings