பெட்ரோலிய விலை குறைவால் சவூதி பட்ஜெட்டில் பற்றாக்குறை !

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந் துள்ளது. 
பெட்ரோலிய விலை குறைவால் சவூதி பட்ஜெட்டில் பற்றாக்குறை !
சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி 

செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 

சவூதியின் புதிய மன்ன ராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப் பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் 

அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப் பிடப்பட்டிருக் கிறது. இது அதிகாரபூர்வ எதிர் பார்ப்பை விட 15 சதவீதம் குறைவாகும்.

ஆனால், இந்த ஆண்டிற் கான செலவு 975 பில்லிய ன்களாக இருக்கும். எதிர் பார்த்ததை விட இது 13 சதவீதம் அதிகமாகும். 

இந்தப் பற்றாக் குறையைச் சரிசெய்ய எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோலின் விலை 50 சதவீதம் வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவி த்திருக் கின்றனர். இருந்த போதும் சர்வதேச விலைகளை விட அது குறைவாகவே இருக்கும்.

டீசல், மின்சாரம், தண்ணீர் ஆகிய வற்றின் விலைகளும் உயரும். சவூதியின் வருவாயில் 77 சதவீதம் எண்ணெய் விற்பனையிலிருந்தே கிடைக்கிறது. 

இந்த வருவாயானது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்தி ருக்கிறது. 

ஒபெக் எனப்படும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி மிகப் பெரிய நாடாகும். 

விலைகளை அதிகரிக்கச் செய்வதற்காக பெட்ரோலிய உற்பத் தியைக் குறைக்க வேண்டுமென மற்ற உறுப்பினர்கள் கோரிய போதும் சவூதி அதனை மறுத்து விட்டது.

இப்படிக் குறைந்த விலையில் வைத்திரு ப்பதன் மூலமே மற்ற தயாரிப் பாளர்களை குறிப்பாக அமெரிக்க எண்ணை நிறுவன ங்களை போட்டியி லிருந்து வெளியேற்ற முடியும் என சவூதி கருதுகிறது.
பெட்ரோலிய விலை குறைவால் சவூதி பட்ஜெட்டில் பற்றாக்குறை !
அமெரிக்க நிறுவ னங்கள் அனைத்தும் பெரும் கடன் சுமையுள்ள, சிறிய நிறுவனங்கள் என்பதால், அந்த நிறுவனங்களை விட தங்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியும்

என சவூதி நினை க்கிறது. 2015ஆம் ஆண்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக ளுக்காக சவூதி 20 பில்லியன் ரியால்களச் செலவழித் திருக்கிறது.

யேமனில் மேற் கொண்ட ராணுவ நடவடிக் கைகள், ஐஎஸ் இயக்க த்திற்கு எதிரான தாக்கு தல்கள் ஆகிய வற்றின் காரணமாக இந்தச் செலவு ஏற்பட்டிரு ப்பதாக சவூதி தெரிவித் திருக்கிறது.
Tags:
Privacy and cookie settings