புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித் துள்ளனர்.
நோர்வேயில், 5,700 வயோதிக ஆண்கள் மத்தியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று மணிநேர உடற்பயிற்சி மேற்கொள் பவர்கள், உடற் பயிற்சி செய்யாத வயோதி கர்களை விட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
வயதோரிகர் களது ஆரோக்கி யத்தை ஊக்கப் படுத்துமாறு, பிரிட்டிஷ் ஜேர்ணல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில், ஆசிரியர்கள் விழிப் புணர்வுடன் கூடியதொரு அழைப்பு விடுத்துள்ளனர்.
வயோதிகர்கள் மத்தியில் குறைந்து வரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.