மழை வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில், ''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவ னங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம்.
அல்லது வீட்டிலிருந்தே ஊழியர்களை பணிகளை முடிக்கச் சொல்லலாம். வெள்ள சூழலை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, அலுவல கத்தில் பணிபுரிய சென்றவர்கள் இரவில் தங்கள் வீடுகளு க்குத் திரும்ப முடியாமல், அலுவல கத்திலேயே தங்கும் சூழலும் ஏற்பட்டது.
இன்று காலையில் வசிப்பிட ங்களில் இருப்பவர்கள் அலுவலகம் வர முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அறிவுறுத் தியுள்ளது குறிப்பிடத்தக்கது.