நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?

வெள்ளம் பாதித்த பகுதிகளில், தொற்று நோய் பரவாத வகையில், எந்த மாதிரியான வழிமுறை களை பின்பற்ற வேண்டும் என, பொது சுகாதார த்துறை ஆலோசனை வழங்கி யுள்ளது. 


* தண்ணீர், பூச்சிகளால் நோய் பரவும் வாய்ப்புள்ளதால், பாதுகாக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துங்கள் .

* தொற்று நோய் பாதிக்காத வகையில், சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவுங்கள். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை, பயன்படுத்த வேண்டாம் 

* காய்ச்சல், வயிற்றுபோக்கு ஏற்பட்டால், மருத்துவ முகாம், அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே பகுதியில், மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், பொது சுகாதார கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் 

* குளம், திறந்த வெளி கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்றால், அது சுத்திகரிக்கப்படாதது என்பதால், பொது சுகாதாரத் துறைக்கு, மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்

* மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில், குளோரின், 2 பி.பி.எம்., அளவிலும், தெரு, வீட்டு குழாய்களில் வரும் தண்ணீரில், 0.5 பி.பி.எம்., என்ற அளவிலும் இருக்க வேண்டும். 10 லட்சத்தில், 1 பங்கு தான், பி.பி.எம்., என, கணக்கிடப் படுகிறது 

* குடிநீர் தொட்டிகளில், தண்ணீரை முற்றிலும் வெளியேற்றி, 'பிளீச்சிங் பவுடர்' போட்டு நன்கு சுத்தம் செய்து, அதன் பின் தண்ணீர் நிரப்ப வேண்டும். அசுத்தங்களை வெளியேற்ற, குழாய்களை திறந்து, ஐந்து நிமிடம் கழித்த பின் பயன்படுத்த வேண்டும் 


* நிவாரண முகாம்களில் உள்ளோருக்கு, சரியான கழிப்பறை வசதி அவசியம். இல்லா விட்டால், உரிய வசதி செய்து தரும்படி, மக்கள் கோரலாம்

* மருத்துவ முகாம்கள் நடக்கும் இடம், அரசு மருத்துவ மனைகள், தொலைபேசி வழியாக மருத்துவ தகவல் தரும், '104' சேவை மையத்திலும் ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு பொது சுகாதாரத் துறை சார்பில், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
Tags:
Privacy and cookie settings