முதல் உதவி… செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!
1. எதிர்பாராத விதமாக பட்டாசால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியா க காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும்.
தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு.
பின்னர், ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டு விட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.
சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டு விட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்து வீட்டார் சொல்லும் ஆயின்ட்மென்ட் போன்ற வற்றை போடக்கூடாது.
இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப் பட்டுள்ளது என்பதை சரியாகச் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.
4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது காற்றில் பறக்கக் கூடிய ஆடைகளை அணிவது கூடாது.
குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைக ளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும் போது
எரியும் விளக்கின் நெருப் பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவ தற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும் போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
5. தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.
6. எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக் கூடாது.
7. புஸ்வானம் எரிய வில்லை என்றால், கையில் எடுத்துப் பார்க்கக் கூடாது. திடீரென்று வெடித்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
8. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.
9. ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.
10. குடிசைகள் உள்ள இடங்களிலோ, மனிதர் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலோ வெடி வெடிப்பதைத் தவிர்க்கலாம். அல்லது, கவனமாக நான்கு புறமும் கவனித்து வெடிகளை வெடிக்க வெண்டும்.
11. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும்.
வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக் கூடாது.
ஏனெனில், விபத்து ஏற்பட்டால் விபத்துடன் வெடிப் பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளி களை ஏற்படுத்தி விடலாம்.
12. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது. கண் பாதுகாப்பு …
பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின் போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும்,
யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையயும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.
1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ
அல்லது இரும்புத் துகளோ தாக்கி விட்டது.ஆனால் கண்களி லிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை.
வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவ மனைக்கு சம்பந்தப் பட்டவரை அழைத்துச் செல்வதே சிற்ந்த காரியம்.
ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை.
உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்கா விட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
2. கண் விபத்துக் குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது.
இருப்பினும் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
கண்களைக் கசக்கு வதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகறிக் கலாம்.
3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கி விட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாத வாறு டேப்பினால் ஒட்டி
அல்லது பாதுக்காப்பு க்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
4. நெருப்புக் காயத்தினால் காயம் பட்ட குழந்தைய மருத்துவ மனைகு அழைத் துச் செல்வதற்கு முன்பு வலி நிவாரணியாக
எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலி யைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுப்பது தவறு.
குழந்தை களைப் பொறுத்த மட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக் குழாய்களை மென்மை யானதாக்கி விடும். எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது.
எனவே, ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.
5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப் படுத்த வேண்டும்.
சில பெற்றோர்கள் குழந்தை களை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படு த்துவார்கள்.
இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல. மன நலம் சார்ந்த பிரச்னையும் கூட. ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைரும் விரும்புவது!
பாதுகாப்பான நடவடிக்கை களோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டா டுவோம்!
அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்! தகவலுக்கு நன்றி கட்டுரை யாசிரியர்: அ.போ. இருங்கோவேள் – மருத்துவ சமூக வியலாளர் (Medical Sociologist).