கும்பகோணத்தில் சாலைகளில் சுற்றிய 290 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரி கூறினார்.
அபராதம்
இது பற்றி கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திறிந்த 290 மாடுகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் மாடுகளை பொது ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கை
மேலும் நகராட்சி பகுதிகளில் யாரும் பன்றிகளை வளர்க்கக்கூடாது. அப்படி மீறி வளர்ப்பது கண்டறியப்பட்டால் அவைகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்துவதுடன் அதனை வளர்ப்போர் மீது பொது சுகாதார சட்டவிதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.