செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை.. 100,00,00,000 !

இந்தியாவில் 100 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 + கோடி என்பது குறிப்பிட த்தக்கது.
செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை.. 100,00,00,000 !
அக்டோபர் மாதத் திலேயே இந்தியா வின் செல்போன் இணைப் புகள் எண்ணி க்கை 100 கோடியைத் தொட்டு விட்டதாக டிராய் தெரிவித் துள்ளது. 

அதி வேகமாக இந்தியா வில் செல்போன் துறை வளர்ந்து வருவதாகவும், சீனாவுக்கு அடுத்து இந்தியா வில் தான் அதிக அளவில் செல்போன் சந்தாதா ரர்கள் உள்ளதா கவும் அது தெரிவித் துள்ளது.

அதிகரிப்பு... 

சமீப காலமாக இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும், 

சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித் துள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.

கூடுதலாக... 
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன என்று கணக்கு கூறுகிறது. 

இந்த திடீர் உயர்வு தான் மொத்த எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த உதவியுள்ளது. 

சீனர்கள்... 

ஆனால் இந்த விஷயத்தில் நம்மை சீனா கடந்த 2012ம் ஆண்டி லேயே முந்தி விட்டது. அந்த ஆண்டில் தான் சீனாவில் செல்போன் இணைப்பு களின் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டது.

பெருமை... 

இது குறித்து மத்திய ஐடி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி பிரசாத் கூறுகையில், இது நிச்சயம் நமக்கு பெருமையான தருணமாகும். 

தொழில் நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக உயரத்தைத் தொட்டு வருவதை இது நிரூபிப் பதாக உள்ளது என்றார்.
மொத்த எண்ணிக்கை... 

100 கோடி என்பது 100 கோடி இந்தியர்கள் என்று அர்த்தம் கிடையாது. மொத்த இணைப்புகளின் எணணிக்கை தான் 100 கோடி என்பதாகும்.

பீகார்... 

இந்தியாவில் பீகார் போன்ற மிகவும் வறுமையான மாநிலங்களில் செல்போன் பரவல் என்பது சற்று குறைவாக உள்ளதாகவும் டராய் கூறுகிறது. 

அங்கு 54 சதவீதத்திற்கும் கீழாக செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை உள்ளதாம். 

செல்போனில் இணையம்... 
இந்தியாவில் பெரும்பாலான செல்போன் பயன் பாட்டாளர்கள் செல்போனில் தான் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். 

எனவே ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி விஸ்வரூபத்தை எட்டியுள் ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.
Tags:
Privacy and cookie settings