இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றிவிடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம்.
அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G 4G என்றால் என்ன என்று சுருக்க மாக விளக்கு கிறேன்.
1G NETWORK
1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன் முதலாக செல்பேசி சேவை அறிமுகப் படுத்தப் பட்ட போது செல்பேசி கட்ட மைப்புக் காக ஏற்பட்ட தொழில் நுட்பம்.
இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில் நுட்பம். இதனை AMPS (Advanced mobil phone System) என்றும் கூறுவார்கள்.
இந்த தொழில் நுட்பத்தின் படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும் தாம் முடியும் sms போன்ற சேவைகள் இந்த தொழில் நுட்பத்தில் கிடையாது.
2G NETWORK:
2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட எண்ணியல் (Digital) தொழில் நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும்cdma (Code Division Multiplexing) என்னும் தொழில் நுட்பத்தில் இயங்குவது.
இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள்.
இந்தியா வில் 1990-களின் மத்தியில் 2G தொழில் நுட்பத்தைக் கொண்டு தான் செல்பேசி சேவை தொடங்கப் பட்டது.
2.5G NETWORK:
2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G NETWORK:
2.5G தொழில் நுட்பத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப் பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலி களுக்கு (Applications) போதுமான தாக இல்லை.
எனவே இந்த 3G தொழில் நுட்பத்தில் அகன்ற அலை வரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப் பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு கால கட்டதில் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் பட்டது.
4G NETWORK
4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில் நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள் (Factors):
அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலை வரிசை (Mobile Broadband)
4G தொழில் நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேக முள்ள அகன்ற அலை வரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசை யினால் கிடைக்கப் போகும் சில சேவைகள்.
( மொபைல் டிவி ) Mobile TV :
1. அதிக வரையறை ( High Definition ) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசி யில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந் தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசி யில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலை யாக உலகத் தின் எந்த மூலை யிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர் களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
( லைவ் ஸ்ட்ரீமிங் ) Live Streaming :
அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
( வீடியோ காலிங் ) Video calling :
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேச முடியும். நண்பர் களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக் கொண்டு
இருக்கும் போது மனைவி செல்பேசியில் கூப் பிட்டால் நான் ஆபிசுல முக்கிய மான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
( கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது. )
2.கட்டமைப்பு ( NETWORK)
2G மற்றும் 3G தொழில் நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசை மாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு.
இணைய (Internet) சேவை களை வழங்க தகவல் பெட்டக விசை மாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்பு தான்.
அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்தி லிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியா கவும், இணைய சேவைகள் (E-mail, webborsing) இன்னொரு பாதை வழியா கவும் நம் செல்பேசியை வந்தடைகிறது.
உதாரண மாக சென்னை யிலிருந்து தஞ்சாவூரு க்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது.
4G தொழில் நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice vip ip என்ற தொழில் நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப் படுகிறது.
சென்னை யிலுருந்து தஞ்சாவூ ருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்ட மைப்பின் ஒரு பகுதி.
4G CORE NETWORK :
குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டி ற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses).
ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவை யில்லை.
அதே போல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
3.பெறுவெளி சுதந்திரம் ( ACCESS INDEPENDENCE )
4G தொழில் நுட்பத்தின் அடுத்த முக்கிய மான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளி களையும் (Access) இந்த கட்டமைப்பு பயன் படுத்த உதவுகிறது. கீழே யுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப் பினால் ஏற்படும் நன்மைகள்:
மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங் களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டு களில் எல்லா செல்பேசி நிறுவனங் களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில் நுட்ப வார்த்தை களைத் தேடி எழுது வதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...