கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி தேடும் பணி தீவிரம் !

திருவொற்றியூரில் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரி ழந்தனர். ஒருவர் மாயமாகி விட்டார். 
கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி தேடும் பணி தீவிரம் !
சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணி (17), சூர்யா (14), புவனேஷ் (16), தினேஷ் (15). 4 பேரும் நண்பர்கள். 

மணி டீக்கடையில் வேலை செய்தார். மற்றவர்கள் அருகே இருந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

அரையா ண்டு தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்தவர்கள், மணியை அழைத்துக் கொண்டு, திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதிக்கு சென்று கடலில் குளித்தனர்.

அப்போது பெரிய அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். 

அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகே இருந் தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீனவர்கள் மற்றும் போலீஸார் விரைந்து வந்து கடலுக்குள் தேடினர்.
அதில் நீரில் தத்தளித்த புவனேஷை காப்பாற்றினர். சிறிது நேரத்தில் சூர்யா, மணி ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கின. 

மாயமான தினேஷை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து திருவொற்றியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:
Privacy and cookie settings