2015 இல் வசூல் ராணி யார்?

1 minute read
தமிழ் சினிமா என்றாலே அது கதாநாயகர்கள் கையில் தான். இருந்தாலும், இந்த ஆண்டில் கதாநாயகிகள் சோலோவாக நடித்த சில படங்களும் ஹிட் ஆகின. 
2015 இல் வசூல் ராணி யார்?
2015 இல் நயன்தாரா நண்பேண்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் ஆகிய 5 படங்களில் நடித்தார்.

இதில் நண்பேண்டா சுமாராக ஓடினாலும், இதைத் தொடர்ந்து வந்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் ஆகிய படங்கள் தொடர் வெற்றிகளைப் பெற்றன. 

என்னை அறிந்தால், பூலோகம், அப்பாடக்கர், தூங்கவனம் என 4 படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா.

இதில் என்னை அறிந்தால், தூங்காவனம், பூலோகம் ஆகிய படங்கள் சுமாரான ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளன. 
புலி, ரோமியோ ஜுலியட், ஆம்பள, வாலு என ஹன்சிகா 4 படங்களில் நடித்தார். இதில் ரோமியோ ஜுலியட் படம் மட்டுமே சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளது. 

என்னை அறிந்தால், டப்பிங் படமான ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி என 4 படங்களில் அனுஷ்கா நடித்தார். 

இவற்றில் என்னை அறிந்தால் சுமார் ஹிட்டாக, பாகுபலி மெகா ஹிட் அடித்தது. ஸ்ருதிஹாசன் இதுவரை தமிழில் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆனது இல்லை.

இதற்கு புலி படமும் ஒரு உதாரணமாக அமைய, இதைத் தொடர்ந்து வெளிவந்த வேதாளம் மெகா ஹிட் ஆகியமை இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. 
எமி ஜாக்ஸன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஐ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். 

ஆனால், இவர் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் பெரும் தோல்வியைக் கொடுத்தது. இருந்தாலும் 2.o, கெத்து என பல படங்கள் இவர் கைவசம் உள்ளன. 

சமந்தா இதுவரை தமிழில் நடித்த படங்களில் நான் ஈ, கத்தி மட்டுமே ஹிட். இந்த வருடம் இவர் நடிப்பில் வந்த 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்விதான்.

தமிழில் ஒரு வெற்றிப் படத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு ஒரே நாளில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றன. 
நித்யா மேனன் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விட்டார். தமன்னா இந்த வருடம் பாகுபலி படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 

இப்படமும் இவருக்கு நல்ல பெயர் மட்டுமின்றி வசூல் ராணியாகவும் மாற்றியுள்ளது.

ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் களம் இறங்கி இன்றைய நாயகிகளுக்கு சவால் விடும் படி நடித்து வெற்றி பெற்றார். 
இந்த வருடத்தில் வசூல், படத்தேர்வு, ரசிகர்களை கவர்ந்தவர் என அனைத்திலும் நம்பர் 1 இடத்தில் இருப்பது நயன்தாரா தான் என்று தெரிகின்றது.
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings