சீனாவில் 37 பல்கலைக் கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர் களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப் பட்டதாகவும்,
அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப் பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணி யாற்றும் கணித ஆசிரியர் ஆவார்.
இவர் 31 மாகாணங்களில் உள்ள 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்து உள்ளார்.
ஹாங்காங் உள்பட பல நகரங்களிலும் இதனை விற்பனை செய்து வந்து உள்ளார்.
சன் என்ற புனைப் பெயருடன், சங்கேத வார்த்தைகளைப் பயன் படுத்தி சமூக வலைத் தளங்கள் மூலம் அவர் இவற்றை விற்பனை செய்து உள்ளார்.
விவசாயத் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள சன், தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே மரிஜுவானாவை வளர்த்து பதப்படுத்தி விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.