சிவகார்த்திகேயன், அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன?

தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் ஹீரோக்களில் ஒருவராக ரஜினி முருகன் படம் மூலம் உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். 
சிவகார்த்திகேயன், அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன?
டிவியில் மிமிக்ரி கலைஞராக ஆரம்பமான அவரது கலையுலக வாழ்க்கை, தற்போது ஒரு உச்சத்தைத் தொட்டி ருக்கிறது.

எந்த விதமான திரையுலகப் பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்தத் திறமையால் சிவகார்த்திகேயன் வளர்ந்திருப்பது தான் 

அவருக்கு குடும்பத்து ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது என பலரும் கருத்துத் தெரிவிக் கிறார்கள்.

'வேதாளம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை யை 'ரஜினி முருகன்' படம் நிகழ் த்தியிருப்ப தாகச் சொல்கிறார்கள். 

அஜித், விஜய் போன்ற ஹீரோக்களுக்கு மட்டுமே இருந்த ஓபனிங் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் இந்தப் படத்தில் கிடைத்துள்ளது என்று வினியோக வட்டாரங்கள் பாராட்டுகின்றன.

அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் என சிலர் அவரை மேலும் உயர்த்திக் கொண்டிருக்க, இன்னும் சிலரோ அவரை அஜித்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். 
அஜித்தும் எந்த விதமான திரையுலகப் பின்ன ணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்ததே அதற்குக் காரணம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை ஒன்றரை வருடங்களுக்கு முன் சந்தித்துப் பேசியதைப் பற்றி சிவகார்த்திகேயன் மனம் திறந்திருக்கிறார். அஜித் சாரை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

அவர் என்னைப் பார்க்க ணும்னு சொன்னதும் அவரைப் போய்ப் பார்த்தேன். வெளியில் அவரை எந்த அளவிற்குக் கொண்டாடு கிறார்களோ, அதை அவர் வெளிய காட்டிக்க வேயில்லை. 

அஜித் சார்னு சொன்னாலே பத்து நிமிஷத் துக்குக் கைத்தட்டல் கேட்டுக் கிட்டேயிருக்கலாம். ஆனால், அவர் அவ்வளவு அமைதியா இருக்கிறாரு. அவரோட சந்திப்பு நான்கு மணி நேரம் போச்சி.

அவ்வளவு நேரம் அவர் என் கூட பேசுவா ருன்னு நான் நினைக்க வேயில்லை. 
அந்த சந்திப்பு நடந்து ஒன்றரை வருஷம் ஆச்சி, அதை வெளியில சொல்ல வேயில்லை, விளம்பரமா க்கிடக் கூடாதுன்னு இருந்தேன். 

அவர் வாழ்க்கையில நடந்த பல விஷயங்களைச் சொன்னாரு. அதை எப்படியாவது கடைபிடிக்கணும்னு முயற்சி பண்ணிட்டி ருக்கேன், என சிவகார்த்திகேயன் சொல்லியி ருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings