படுக்கை வசதியுடன் கூடிய குண்டு துளைக்காத நவீன பஸ்சை தனது பயன்பாட்டுக்காக வாங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்.
எதிர் பார்த்ததை போலவே எதிர்க் கட்சிகளிடமிருந்து இதற்காக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஆந்திராவி லிருந்து பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வர் என்ற பெருமையுடன் அரியணை ஏறியுள்ளார் கே.சந்திரசேகரராவ்.
அவ்வப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன், பங்காளி சண்டையி்ல ஈடுபட்டாலும், மாநிலத்தை பல வகைகளில் முன்னேற்ற திட்டங்களை கொண்டு வர முனைப்பு காட்டுகிறார்.
இந்நிலையில், தான் பயணிக்க, ரூ.5 கோடி செலவில், குண்டு துளைக்காத நவீன பஸ் ஒன்றை அரசு செலவில் வாங்கியுள்ளார் ராவ்.
மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன த்தின் இந்த பஸ்சை, துப்பாக்கி குண்டு களால் துளைக்க முடியாது. குண்டு களால் தகர்க்க முடியாது.
பஸ் உள்ளே, பாத்ரூம், கழிவறை, மீட்டிங் ஹால், படுக்கையறை, இணையம் என சகல வசதி களும் உள்ளன.
குடிநீர் வினியோக திட்டம் சரியாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை நேரில் சென்று கண்டறிய உள்ளாராம் ராவ். இதற்காக மாதத்தில் 10 நாட்களா வது இந்த பஸ்சில் மாநில மெங்கும் சுற்றப் போகிறாராம்.
எனவேதான் இந்த பாதுகாப்பு வாகனம் அவசியப் பட்டுள்ளது என்கிறது அரசு தரப்பு. அதே நேரம், எதிர்க் கட்சியான காங்கிரசின் தலைவர் ஹனு மந்தராவோ, இதை அநாவசிய செலவு என கூறுகிறார்.
இந்த பணத்தை ஏழைகள் நலத் திட்டத்திற்காக கொடுத்தி ருக்கலாம் எனவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது,
பாதுகாப்பு இல்லாமல் தானே சந்திர சேகரராவ் மாநிலம் முழுவதும் சுற்றித்திரிந்தார், இப்போதும் அப்படியே செல்லட்டும் என்றும் ஹனு மந்தராவ் கூறியுள்ளார்.
Tags: