பயணியின் உடமைகள் தொலைந்து போன விவகாரத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இழப்பீடாக 60,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் நீதி மன்றம் தெரிவித் திருக்கிறது.
திரிபுராவை சேர்ந்த டாக்டர் அடானு கோஷ் என்பவரின் உடமை காணாமல் போனதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமதி ஜே.எம். மாலிக் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நுகர்வோர் கீழமை அமைப்பு கோஷ்க்கு சாதகமாக 50,000 ரூபாய் வழங்க உத்தர விட்டுள்ளது.
ஆனால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேல் முறையீடு செய்ததன் காரண மாக இந்த வழக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் சமரச தீர்ப்பாய த்துக்கு (என்.சி. டி.ஆர்.சி.) சென்றது.
அங்கு கூடுதலாக 10,000 ரூபாய் சேர்த்து 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தர விடப் பட்டுள்ளது. ஆனால் 90,000 ரூபாய் மதிப் பிலான பொருட்கள் காணாமல் போ ய்விட்டன என்று கோஷ் தெரிவித்தார்.