விமானத்தில் 70 பயணிகளை கீழே இறக்கிவிட்ட இன்டிகோ !

1 minute read
ஹைதராபாத்தில் இருந்து ராய்பூருக்கு செல்லவிருந்த இன்டிகோ விமானத்தில் இருக்கைகளை மாற்றிக் கொண்டே இருந்த 70 பேர் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு விமானம் ராய்பூருக்கு சென்றது. 
இன்டிகோ விமானம் ஒன்று ஹைதராபாத்தில் இருந்து ராய்பூருக்கு நேற்று கிளம்பியது. விமானத்தில் 70 பேர் ஒரே குழுவாக ஏறியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமராமல் இஷ்டப்படி இருக்கைகளை மாற்றி மாற்றி அமர்ந்துள்ளனர்.

ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறு கூறிய விமான சிப்பந்திகளின் பேச்சை அவர்கள் யாரும் காதில் வாங்கவில்லை. 

மேலும் ஒரு பயணி தனது பையால் விமான ஊழியரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து சிப்பந்திகள் இது குறித்து தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இருக்கைகளுக்காக சேட்டை செய்த 70 பேரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். 

அதன் பிறகு விமானம் கிளம்பிச் சென்றது. கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகளோ விமான சிப்பந்திகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

மேலும் தங்களின் உடைமைகளுடனேயே விமானம் ராய்பூருக்கு சென்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings