கன்னியா குமரியில் விபசார கும்பலை போலீசில் சிக்க வைத்த தம்பதி ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதி பிரான்சிலிஸ் ஜான்–கிளாரா ஜாய்ஸ் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் விடு முறைக்காக கன்னியா குமரி சுற்றுலா வந்தனர்.
அவர்கள் கன்னியா குமரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தனர். மாலையில் பிரான்சி லிஸ் ஜான் மட்டும் தனியாக விவேகானந்த புரம் வழியாக நடந்து சென்றார்.
அப்போது வாலிபர் ஒருவர் பிரான்சிலிஸ் ஜானிடம் அருகில் உள்ள லாட்ஜில் அழகிகள் இருப்பதாகவும், அங்கு சென்றால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
இது பற்றி பிரான்சிலிஸ் ஜான் மற்றும் அவரது மனைவி கிளாரா ஜாய்ஸ் இருவரும் கன்னியா குமரி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் அந்த விடுதிக்கு சென்ற போது அங்கு விபசாரத் தில் ஈடுபட்டிருந்த அழகிகள் திருவனந்த புரத்தை சேர்ந்த ஜெகிதா (29),
பெங்களுரை சேர்ந்த ஜோசினா பேகம் (30) மற்றும் வாடிக்கை யாளர்கள் பிரதீப்(32), ஜோஷி (27), திபு ஆகியோரை கைது செய்தனர்.
விடுதி மேலாள ர்கள் விஜயசெல்வன், சேகர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். உரிமை யாளரை தலை மறைவாகி விட்டார். அவரை தேடி வருகி றார்கள்.
விபசார கும்பலை போலீசில் சிக்க வைத்த தம்பதி பிரான்சி லிஸ் ஜான், கிளாரா ஜாய்ஸ் இருவரும் இன்று காலை நாகர் கோவில் ஆட்சியர் அலுவ லகம் வந்தனர்.
அங்கு நீண்ட மனு ஒன்றை தயாரித்து அதனை ஆட்சியரிடம் வழங்கினர். அதில் கன்னியா குமரியில் நடை பெறும் பல்வேறு முறை கேடுகள் பற்றி விலா வாரியாக குறிப்பிட்டு இருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:
கன்னியா குமரியில் ஏராளமான முறை கேடுகள் நடக்கிறது. பெண்களை இழிவாக பேசுவது, கூட்டத்தை பயன்படுத்தி அவர்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்கள் தங்கு தடை யின்றி நடக்கிறது.
கன்னியா குமரியில் ஏராளமான முறை கேடுகள் நடக்கிறது. பெண்களை இழிவாக பேசுவது, கூட்டத்தை பயன்படுத்தி அவர்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்கள் தங்கு தடை யின்றி நடக்கிறது.
கடற்கரை யில் குளிக்கும் பெண்களை ரகசியமாக படம் எடுப்பது தொடங்கி விடுதியில் தங்கும் பெண்களிடம் ஆபாசமாக நடப்பது வரை ஏராளமான சம்பவங் கள் நடந்து வருகிறது.
இது பற்றி போலீசில் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுப்பதி ல்லை. புகார் செய்பவர் களையே மிரட்டு கிறார்கள். அவரை தெரியும், இவரிடம் கூறி விடுவேன் என்று எச்சரிக் கிறார்கள்.
நாங்கள் பலமுறை கன்னியா குமரிக்கு வந்துள்ளோம். இங்குள்ள சில விடுதி களில் விபசாரம் நடப்பதை கண்டு மனம் துடித்து போனோம்.
நாங்கள் பலமுறை கன்னியா குமரிக்கு வந்துள்ளோம். இங்குள்ள சில விடுதி களில் விபசாரம் நடப்பதை கண்டு மனம் துடித்து போனோம்.
எனவே இதனை ஆதாரத் துடன் வெளிப் படுத்தினால் மட்டுமே நடவடிக்கை இருக்கும் என்பதால் நாங்கள் போலீசாரை உஷார் படுத்தி விபசார கும்பலை சிக்க வைத்தோம்.
இப்பிரச் சினையை இத்துடன் விடப் போவ தில்லை. நாங்கள் காரில் ஊருக்குள் நுழையவே கூடுதல் கட்டணம் செலுத்தி யுள்ளோம். இதுபற்றி கேட்டதால் மிரட்டப் பட்டோம்.
நேற்று இரவு ஒரு கும்பல் 2 கார்களில் எங்களை துரத்தினர். நாங்கள் காரில் தப்பி மதுரைக்கு சென்றோம். இந்த பிரச்னை எனக்கு ஏற்பட்ட பிரச்னை அல்ல, பெண் குலத்துக்கோ ஏற்பட்ட பிரச்னை ஆகும்.
இதற்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத் துள்ளோம். அதன் மூலம் தீர்வு கிடைக்க வில்லை என்றால் அடுத்து சட்ட ரீதியான நடவடி க்கையில் இறங்குவோம் என்றனர்.
Tags: