துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தீ விபத்து !

0 minute read
துபாய் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபா அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 
துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா என்ற இடத்தில் உள்ள 63 அடுக்கு மாடி ஆடம்பர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

உலகில் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் அறிந்த தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.
Tags:
Today | 19, April 2025
Privacy and cookie settings