தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடலூரில் புதன்கிழமை கூறினார்.
கடலூர் துறைமுகத்தில் புதன்கிழமை யன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூரைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் அவரிடம் துறைமுகம் முகத்துவாரம் தூர்வாருதல்,
துறைமுகம் மேம்பாடு குறித்து பேசினர். அவர்களிடம் தேவையான நடவடிக்கை எடுக்கப் படுமென அமைச்சர் உறுதி யளித்தார்.
துறைமுகம் மேம்பாடு குறித்து பேசினர். அவர்களிடம் தேவையான நடவடிக்கை எடுக்கப் படுமென அமைச்சர் உறுதி யளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் முகத்து வாரத்தில் அதிகமாக மணல் தேங்குவதால் படகுகள் அடிக்கடி விபத்துக் குள்ளாகி உயிரிழ ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு மத்திய அரசால் என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
இதற்கு மத்திய அரசால் என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
எனினும் இத்துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், பல்வேறு பணிகள் மேற்கொள்வ தற்காக ஏற்கனவே ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒருவா ரத்தில் துவங்கும். கூடுதலாக 250 மீட்டருக்கு கரைகளில் கற்கள் கொட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததால் இப்பொங்கல் மகிழ்ச்சியான பொங்கலாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
நாள்தோறும் லட்சக்கணக்கான மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சிக்காகவும், தோல் பதனிடப்பட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதனை விலங்கு நல ஆர்வலர்களால் ஏன் தடுக்க முடியவில்லை.
ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. எங்காவது ஜல்லிக்கட்டு மாடுகள் அடிமாட்டிற்காக விற்கப்பட்டதாக கூற முடியுமா?.
பெற்ற குழந்தையை விட அதிகமான பாசத்துடன் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமானது என்பதால் தான் அதனை நடத்திட இவ்வளவு ஆர்வம் காட்டப்படுகிறது.
எனவே, மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நாளை (ஜன.14) டெல்லிக்குச் செல்கின்றேன். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 3 முறை இலங்கைக்கு தமிழக மீனவர்களை அழைத்துச் சென்றுள்ளோம்.
எனினும், இருதரப்பு மீனவர்களிடமும் ஒருமித்த கருத்து நிலவவில்லை. தமிழக மீனவர்கள் மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனிலும் அக்கறைக் கொண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது, பாஜக வர்த்தக அணி நிர்வாகி மு.சக்திகணபதி, நகரத் தலைவர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.