தாவூத் இப்ராகிம் சகோதரியின் படம்.. சோனாக்ஷி சின்ஹா !

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆர்வமுடன் இருக்கிறார்.
தாவூத் இப்ராகிம் சகோதரியின் படம்.. சோனாக்ஷி சின்ஹா !
மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ ங்களில் தொடர் புடைய தேடப்படும் குற்றவாளி நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம். இந்தியா வில் இருந்து வெளி நாட்டிற்கு தாவூத் தப்பி யோடிய நிலையில் அவரது சகோதரி ஹசீனா மும்பையில் வசித்து வந்து ள்ளார்.

கடந்த 2014ம் வருடம் உடல்நல குறைவினால் ஹசீனா மரணமடைந்து விட்டார். ஹசீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படததில் நடிப்பதற்காக பலரது பெயர் பேசப்பட்ட நிலையில்

ஹசீனா தி குயின் ஆப் மும்பை என்ற பெயரிடப்பட்ட படத்தில்  இறுதியாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில், இத்திரைப் படம் குறித்து சோனாக்ஷி கூறும் பொழுது, பேச்சு வார்த்தையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 
படத்தில் நடிப்பது குறித்து நான் ஒப்புதல் அளிக்கும் முன் வேறு எதுவும் பேச வேண்டாம் என நான் விரும்புகிறேன் என செய்தியா ளர்களிடம் கூறியுள்ளார்.

அபூர்வா லக்கியா இயக்கத்தில், ஹசீனாவின் உணர்ச்சிபூர்வ வாழ்க்கையை குறித்து விளக்கும் வகையில் படம் இருக்கும். சோனாக்ஷி தொடர்ந்து கூறும் போது, 

இந்த படத்தில் நடிப்பது குறித்து நான் ஆச்சரிய மடையவில்லை... இது போன்ற சக்தி வாய்ந்த பாத்திரத்தை ஏற்று என்னால் நடிக்க முடியும் என பட தயாரிப்பாளர்கள் உணருகின்றனர்.

அதனை சிறந்தது என நான் உணர்கிறேன். இந்த படத்தில் உள்ள விசயம் குறித்து நான் ஆச்சரியமடைந்து ள்ளேன். ஏனெனில் இதற்கு முன் இது போன்ற வேடத்தை ஏற்று நான் நடித்தது இல்லை என அவர் கூறியு ள்ளார்.
தாவூத் இப்ராகிம் சகோதரியின் படம்.. சோனாக்ஷி சின்ஹா !
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் பொழுது, படத்திலுள்ள விசயம் உங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தியதா? என கேட்டதற்கு, இல்லை... உண்மையில் இல்லை என கூறினார்.

அபினய் தியோவின் போர்ஸ் 2 மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சோனாக்ஷி.

ஆக்சன் படங்கள் நிறைந்த வருடம் ஆக 2016 எனக்கு இருக்கும். வேறு சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

வெகு சீக்கிரம் இதனை குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என அவர் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings