ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடுவதாக தான் நினைக்கவில்லை என திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாநில அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு,
இது ஒரு சட்டப் பிரச்னை. அதுகுறித்து ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது என்றார்.
ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்றார் கருணாநிதி.