அமெரிக்காவில் உல்லாச கப்பலின் லிஃப்ட் உடைந்து தொழிலாளி பலி !

1 minute read
அமெரிக்காவில் உல்லாச கப்பல் ஒன்றில் பழுதான லிஃப்ட் உடைந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உல்லாச கப்பலின் லிஃப்ட் உடைந்து தொழிலாளி பலி !
அமெரிக்காவில் Carnival Ecstasy எனும் உல்லாச கப்பலில் பழுதான லிஃப்டை தொழிலாளி ஒருவர் சரி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

புறப்பட தயாரான நிலையில் இருந்த அந்த கப்பலில் குறிப்பிட்ட அந்த லிஃப்டில் இருந்து திடீரென்று இரத்தம் கொட்டத் துவங்கி யதாக பயணிகள் தெரிவித்து ள்ளனர். 

பயணிகளில் ஒருவரான டேவிஸ் என்பவர் தமது மனைவியுடன் உணவருந்த செல்லும் வழியில் இந்த கோரமான காட்சியை கண்டு அதிர்ந்துள்ளார்.

லிஃப்டில் இருந்து தண்ணீர் போல ரத்தம் கொட்டியதாகவும், அது நிற்காமல் வழிந்தோடியதாகவும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தெரிவித்துள்ளார்.

மிகவும் கொடுமையான ஏதேனும் விபத்து அந்த லிஃப்டில் நிகழந்திருக்க வேண்டும் என தெரிவித்த டேவிஸ், அந்த காட்சிகளை புகப்படம் மற்றும் வீடியோ பதிவுகளாக எடுத்துள்ளார்.
இதனிடையே கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

அந்த லிஃப்டில் 66 வயதான ஜோஸ் ஒபாசோ எனுன் தொழிலாளி சிக்கியிருக்கலாம் எனவும், 

எதிர்பாராத விதமாக அந்த லிஃப்ட் உடைந்து விழுந்து அவர் உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings