நகைச்சுவை நடிகர்களில் தனக்கு என்று தனிபாணியை கடைபிடிப்பவர் கருணாஸ். நந்தா படத்தில் இவர் நடித்த ‘லொடுக்குபாண்டி’ கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த கருணாஸ் தற்போது நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதில், கருணாசுடன் அவரது மகன் கென் நடித்திருக்கிறார். இந்த படத்தில் 5 சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை.
இவர்களில் ஒருவராக கருணாஸ் மகன் கென் நடித்திருக்கிறார். இதுபற்றி சிறுவன் கென்னிடம் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்கும் 5 சிறுவர்களில் நானும் ஒருவன்.
டைரக்டர் சார்லஸ் சார் எங்களை மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்தார். எங்களிடம் மிகவும் அன்பாக பழகினார். படப்பிடிப்பின் போது நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்தோம்.
கலகலப்பாக பழகினோம். படப்பிடிப்புக்கு போனது சுற்றுலா சென்றது போல இருந்தது. எனது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள்.
இந்த படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். டைரக்டர் சொன்னபடி நடித்தேன். நான் தொடர்ந்து நடிப்பது பற்றி அப்பா தான் முடிவு செய்வார் என்று சொல்லிட்டு கள்ளமில்லாமல் சிரித்தார் கென்.