தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களிப்போம் என்று 33.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று 33.1 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் எனும் அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது. கடந்த 7ம்தேதி முதல் 19ம்தேதி முடிய 120 தொகுதிகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 5464 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொகுத்து ஆய்வு செய்யப்பட்டன. இன்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.