டெல்லியில் சுற்றுச் சூழலைக் காக்க உச்ச நீதிமன்றமும், மாநில அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆட்டோ மொபைல் துறையினரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக 2000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்களை புதிதாக விற்பனை செய்வதற்கு மார்ச் வரை விதிக்கப்பட்ட தடை காரணமாக
டொயோடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.
இந்நிறுவன ங்களுக்கு முக்கிய விற்பனை சந்தையாகத் திகழ்வதே தலைநகர் டெல்லி தான். விற்பனை சரிவை ஈடுகட்ட இந்நிறுவனங்கள் அடுத்தகட்ட நடவடி க்கையில் இறங்கி யுள்ளன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனரக டிரக் அறிமுகம் மற்றும் பெட்ரோலில் இயங்கும் கே100 எஸ்யுவி அறிமுகம் என சரிவை ஈடுகட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
டெல்லி உத்தரவு தங்கள் நிறுவனத்துக்கு பின்னடைவாக அமைந்து விடக்கூடாது என்பதில் மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனமும் தீவிரமாக உள்ளது.
புத்தாண்டில் புதுப்பொலிவோடு களமிறங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக எஸ்யுவி ரக மாடலைப் போன்ற செயல்திறன் மிக்க ஜிஎல்இ 450 கூபே ரக மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது.
கடந்த வாரம் மும்பையில் இதற்கான அறிமுக விழா நடை பெற்றது.
டெல்லியில் போடப் பட்டுள்ள தடை உத்தரவு தங்கள் நிறுவன விற்பனையைப் பாதிக்கும் என்று நிர்வாக இயக்குநர் ரோலண்ட் எஸ் ஃபோல்கர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 12 புதிய கார்களை அறிமுகப் படுத்த இலக்கு நிர்ணயித் துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் முதலா வதாக ஜிஎல்இ 450-ஐ அறிமுகப்படு த்துவதாகக் கூறினார்.
பிரம்மாண் டத்தின் மற்றொரு பெயர்தான் எஸ்யுவி. பார்ப்பதற்கே கம்பீர மாகவும், உருவத்தில் பெரிய அளவினைக் கொண்டதாகவும், அதிக எண்ணிக்கை யிலானோர் சவுகர்யமாக பயணிக்க ஏதுவானது தான் எஸ்யுவி.
ஆனால் கார்களில் இத்தனை சிறப்பம்ச ங்களையும் இணைத்து சொகுசு காராக உருவாக்கியுள்ளது மெர்சிடெஸ் பென்ஸ்.
ஜிஎல்இ 450 கூபே என்றழை க்கப்படும் இந்தக் கார் (சிறிய எஸ்யுவி) வித்தியா சமானதாக இருந்தது.
கம்பீரமும் தோற்றப் பொலிவும், சொகுசும் ஒருங்கே கொண் டதாக இந்தக் கார் உருவாக் கப்பட்டது தான் இதன் சிறப்பம்ச மாகும். செடான் ரகக் கார்களில் இது மிகப் பெரியது.
மெர்சிடெஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே 3 லிட்டர் பைடர்போ வி-6 இன்ஜினைக் கொண்டது. இதில் அதிகபட்ச செயல் திறன் 362 பிஹெச்பி மற்றும் 520 நியூட்டன் மீட்டராகும்.
இதில் 9 தானியங்கி கியர் பாக்ஸ் இருப்பதால் கியர் மாற்றுவது எளிது. பொதுவாக ஜீப்புகளில் மட்டுமே இருக்கும் 4 சக்கர செயல் திறன் இந்தக் காரில் உள்ளது.
இதனால் 40 சதவீத சக்தி முன் சக்கரத்துக்கும் 60 சதவீத சக்தி பின்சக்கரங் களுக்கும் பரவலாகும். 5.1 விநாடி நேரத்தில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும்.
இதன் முன்புறத் தோற்றம் எஸ்யுவி கார்க ளுக்கே உரித்தான தோற்றப் பொலி வைக் கொண் டுள்ளது. முதல் முறை யாக இதில் 21 அங்குல 5 ஸ்போக் கொண்ட அலாய் சக்கரங்கள் பொறுத்தப் பட்டுள்ளன.
டியூயல் டார்ச் வடிவமைப்போடு வாகன செயல்பாடுகளை உணர்த்தும் வகையில் ஒளி உமிழும் விளக்குகள் உள்ளன.
டியூயல் டார்ச் வடிவமைப்போடு வாகன செயல்பாடுகளை உணர்த்தும் வகையில் ஒளி உமிழும் விளக்குகள் உள்ளன.
சொகுசு வாகனத்தின் வெளிப் புறத்தோற்றம், இன்ஜின் சிறப்பான செயல்பாடு இவற்றோடு மிக உயரிய உள்புறத் தோற்றமும் கொண் டுள்ளது.
வசதிக்கேற்ப அட்ஜெட்ஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஸ்டீயரிங் இதன் சிறப்பம்ச மாகும். மாறுபட்ட பயண அனுபவ த்தைத் தேர்வு செய்வதற்கேற்ப இதில் வசதிகள் உள்ளன.
தனிநபர் பயணம், சொகுசு பயணம், வழுக்கும் பகுதி, ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் என பயணத் துக்கேற்ப காரின் செயல்பாடுகளில் மாற்றம் செய்ய முடியும்.
முன்பக்க டாஷ்போர்டு 8 அங்குல திரை கொண்ட டி.வியுடன் உள்ளது. டெலிபோன், ஆடியோ, வீடியோ, இன்டர்நெட் அனைத்து கட்டுப்பா டுகளையும் டிரைவரே தீர்மானிக்க முடியும்.
இதில் யுஎஸ்பி போர்ட், எஸ்டி கார்ட் பகுதி, குரல் கட்டுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை உள்ளன. சிறிய சமிக்ஞைகள் மூலம் செயல்படும் வகையில் உணர் கருவிகள் உள்ளன.
அத்துடன் மெர்சிடெஸ் பென்ஸ் ஆப்ஸுடன் (செயலி) இது வந்துள்ளது. காரை பார்க் செய்வதற்கு உதவியாக 360 டிகிரி சுழலும் கேமரா உள்ளது.
அத்துடன் பயணிகளின் பாதுகாப் புக்காக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. முன்புற பயணி, டிரைவர் மற்றும் பின் இருக்கையில் பயணி ப்பவர்கள் ஆகியோரின் பாதுகா ப்பையும் இது உறுதி செய்கிறது.
டிரைவர் அசதியில் கண்ண யர்ந்தால் அதை உடனடியாகச் சுட்டிக் காட்டி அலாரம் எழுப்பும்.
60 கி.மீ. வேகம் முதல் 200 கி.மீ. வேகத்தில் சென்றாலும் இது கண்டுபிடிக்கப் படுவதால் கார் விபத்துக் குள்ளாவது தவிர்க்கப்படும்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு, சாம்பல், ஊதா ஆகிய நிறங்களில் இவை வெளி வந்துள்ளன. விலை ரூ. 87 லட்சம். லட்சாதிபதிகள் கார் வைத்துக் கொ ள்ளலாம்.
ஆனால் மெர்சிடெஸ் பென்ஸ் காரை கோடீஸ்வரர்கள் தான் வைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் பென்ஸ் விற்பனை அதிகரித்தது இதைத் தான் காட்டுகிறது.
வரும் ஆண்டிலும் விற்பனை அதிகரிக்கும் என நிறுவனம் நம்புகிறது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் போது,
சொகுசு காரான பென்ஸ் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதில் சந்தேக மில்லை.
சொகுசு கார்கள் என்றாலே மெர்சிடெஸ் பென்ஸ் தான் அனைவரது நினைவு க்கும் வரும். சாலையில் ஓடும் கப்பல் என்றே இதற்குப் பெயர்.
பென்ஸ் காரின் பயண அனுபவம் ஒரு சுகானுபவம். கார் மற்றும் எஸ்யுவி க்களில் பயணிக்கும் அனு பவத்தை ஒன்று சேர அளிக்கிறது பென்ஸ் ஜிஎல்இ 450 கூபே.
டிரைவர் அசதியில் கண்ண யர்ந்தால் அதை உடனடியாகச் சுட்டிக் காட்டி அலாரம் எழுப்பும்.
60 கி.மீ. வேகம் முதல் 200 கி.மீ. வேகத்தில் சென்றாலும் இது கண்டுபிடிக் கப்படுவதால் கார் விபத்துக் குள்ளாவது தவிர்க்க ப்படும்.