பத்ம விருதுக்கு தகுதி இல்லை என்றாலும், அதை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடன் பெறுவதாக திரைப்பட இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பிறந்தவரான ராஜமெளலிக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
இது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த பதிவு:
"என்ன சொல்வ தென்று தெரிய வில்லை. இரு விதமான உணர்வு களோடு இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்த வரை, இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை.
இந்த கவுரவத்தைப் பெறும் அளவுக்கு நான் கலைப் படைப்பு களைத் தந்து விட வில்லை. இது தன்னடக்கம் அல்ல. ராமோஜி ராவ், ரஜினிகாந்த் இருவரும் பத்ம விபூஷண் தகுதியான வர்கள்.
அவர்களது பணி வரும் எதிர்கால தலை முறைகளு க்கும் ஊக்கம் தரும். அத்தகைய மகத்தான வர்களுடன் இந்த விருதைப் பெறுவதில் பூரிப்ப டைகிறேன்.
அவர்களுடன் விருதைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந் துள்ளது என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஆந்திர அரசு என் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்து ரைக்க இருந்தார்கள். என்னுடைய தொடர்ச்சியான வற்புறுத்தலால் என் பெயரை நீக்கினார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கர்நாடக அரசால் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கருத்து எதையும் கேட்கவில்லை. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
நான் பிறந்தது கர்நாடகம், படித்தது ஆந்திரம், பணியுடன் வசிப்பது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா. இந்த அனைத்து மாநிலங்களின் மகனாக இருப்பதில் மகிழ்ச்சி" என்று கூறியிருக்கிறார் ராஜமெளலி.