பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை அனுஷ்கா கூறினார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத் தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–
புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம்.
என்னை சினிமா தான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப் படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
வித்தியா சமான கதாபாத்தி ரங்களில் நடிக்க திட்ட மிட்டு இருக்கிறேன். வழக்க மான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது. எனது பலம் பொறுமை. பலவீனம் சிறுசிறு விஷயங் களுக்கு வருத்தப் படுவது.
அதில் இருந்து விடுபட முயற்சி க்கிறேன். என்னை பற்றி வந்த செய்திகளை சேகரித்து வைப்பது எனது பொழுது போக்கு. பிடிக்கா தவர்கள். கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.
பொய் பேசுபவர் களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டு தள்ளியே இருப்பேன். கஷ்டப் பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இது தான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.
நான் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினை த்தால், அது நாகார்ஜு னாவுக்குத் தான். அவரால் தான் சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். டைரக்டர் பூரி ஜெகன் னாத்தும் என் நன்றிக்கு உரியவர்.
எனக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன். நடிகை களில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்த படம் தான் எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க திட்ட மிட்டு உள்ளேன்.
திருமணம் என்னை சந்திப்ப வர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது.
நேரமும், பொருத்த மான மாப்பி ள்ளையும் அமையும் போது என் திருமணம் நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.