பெல்ஜியத்தில் ஹல்லே நகரில் உள்ள ஹல்லெர்பாஸ் காடுகள், இயற்கை யின் இனிய எழிலுக்கும்,
விதவிதமான அதன் படைப்புத் திறனுக்கும் அடையாளமாக அமைந்த ஒரு சுற்றுலா தலம்.
வசந்த காலத்தில், தரையோடு வளர்ந்திருக்கும் குறுந்தாவர மலர்கள் ஊதா, செந்நிற ஊதா,
மற்றும் சாம்பல் ஊதா நிறங்களில் செறிந்து கம்பளம் விரித்தது போல நீண்ட தூரத்திற்கும் பகுதிகளாகவும் காணப்படுவது

எங்குமே காண முடியாத கண்கவர் விருந்து. இது ஹல்லெர்பாஸ் காடுகளின் தனிச்சிறப்பு.
இது ஒரு பழமையான காடு, ஆனாலும், புதிய புதிய மரங்கள் இளம்பருவ மலர்கள் அதன் பாரம்பரிய சுவடு.
552 ஹெக்டர் (1360 ஏக்கர்) பரப்பளவில் இந்த காடுகள் வியாபித்திருப்பது பெரிதும் ஹல்லே நகரில்தான்.
552 ஹெக்டர் (1360 ஏக்கர்) பரப்பளவில் இந்த காடுகள் வியாபித்திருப்பது பெரிதும் ஹல்லே நகரில்தான்.
ஹல்லே நகரத்தின் ப்லெண்டெர்ஸ் மற்றும் வல்லோனியா ஊர்களின் எல்லைப்பகுதியில் இது அமைந்துள்ளது.
தென் ப்ருஸ்ஸெல்லில் இருந்து 30 நிமிட பயணத்தில் இதை அடைய முடியும்.
தென் ப்ருஸ்ஸெல்லில் இருந்து 30 நிமிட பயணத்தில் இதை அடைய முடியும்.
இந்த வனாந்திரத்தின் தரையைஅலங்கரிப்பதில் முதன்மையாக விளங்கும் மலர்கள் ஹையாசிந்தாய்ட்ஸ்
நான் ஸ்க்ரிப்டா (Hyacinthoides non scripta). இந்த மலர்கள் நிறம், குணம், வடிவங்களால் மூன்று வகைகளா காணப்படுகிறது.
நான் ஸ்க்ரிப்டா (Hyacinthoides non scripta). இந்த மலர்கள் நிறம், குணம், வடிவங்களால் மூன்று வகைகளா காணப்படுகிறது.
மூன்றுமே ஈர்ப்பில் போட்டியிடுகிறது. ஊதா மணி போல தோன்றும் இம்மலர்கள் அதன் காம்புகளில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் காட்சியளிப்பது கவர்ச்சி யளிக்கிறது.
அதனோடு சேர்ந்து புங்கமரத்தின் பசுமை இலைகளும் ஊடுருவும் ஒளியில் மின்னுவது மறக்க முடியாத மந்திர அழகு தான்.
அதனோடு சேர்ந்து புங்கமரத்தின் பசுமை இலைகளும் ஊடுருவும் ஒளியில் மின்னுவது மறக்க முடியாத மந்திர அழகு தான்.
ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்து மே வரையிலான இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மட்டும் அதன் அழகு வெளிப்பாடு, ஆச்சரியப்படும் அளவில் உச்ச மடைகிறது.
நீல வண்ண மலர் விரிப்பு பாதைகளுக்கு மத்தியில் நடைபயில்வதே நெஞ்சை அள்ளும், நினைவில் நீங்காமல் கொள்ளும் ஒரு நிகழ்வுதான்.
ஓங்கி வளர்ந்த பெருமரங்கள், அதன் செழிப்பான பச்சை விதான இலை களுக்குள் ஊடுருவி வரும் சூரிய ஒளி, பலவிதமாய் கீச்சிடும் பறவைகள் ஒலி.
எடுப்பாய் கமழும் இயற்கையின் நறுமணம், தீவன புல் போன்ற இலைகள், ராம்ஸன் என்ற
காட்டு பூண்டு செடியில் நட்சத்திர வடிவிலான வெண்ணிற பூக்கள் என எல்லாம் சேர்கிறது.
கானக நடைபயணத்தில் நம் கவலைகளை பறந்தோட வைக்கிறது.
காட்டு பூண்டு செடியில் நட்சத்திர வடிவிலான வெண்ணிற பூக்கள் என எல்லாம் சேர்கிறது.
கானக நடைபயணத்தில் நம் கவலைகளை பறந்தோட வைக்கிறது.
வேலை பளுவுக்கும் மன அழுத்தத்துக்கும் விடுதலை விடுக்கிறது. ’நமது அன்றாட பிரச்சினைகளின் தவிப்பிலிருந்து
தப்பித்துக் கொள்ள கொடையாக கிடைத்த கோலமிகு சரணாலயம்’ என்கிறார், ஒரு அனுபவ ராஜா ப்ரூஸ்ஸலை சேர்ந்த டயானா.
தப்பித்துக் கொள்ள கொடையாக கிடைத்த கோலமிகு சரணாலயம்’ என்கிறார், ஒரு அனுபவ ராஜா ப்ரூஸ்ஸலை சேர்ந்த டயானா.
’அதன் அருகே வசித்தாலும் ஒவ்வொரு வருடமும் ஒரு டஜனுக்கு குறையாத தடவைகள் பார்த்து ரசித்து வருகிறேன்.
அந்த வனத்தின் வசீகரம் மலர்களின் வாசனையோடு என்னோடு வாழ்கிறது.
அந்த வனத்தின் வசீகரம் மலர்களின் வாசனையோடு என்னோடு வாழ்கிறது.
அங்கு செல்கிறபோதெல்லாம் தேவதை கதைகளில் வரும் காட்சிகளை நிஜமாக சென்றடைந்ததாக உணர்வேன்.
நான் பெற்ற இன்பம் பலரும் பெற பரிந்துரைத்தும் வருகிறேன்’ என்று வர்ணிக்கிறார் ஆண்டி என்பவர்.
நான் பெற்ற இன்பம் பலரும் பெற பரிந்துரைத்தும் வருகிறேன்’ என்று வர்ணிக்கிறார் ஆண்டி என்பவர்.
ஹல்லெஸ் காடு ஐரோப்பாவின் பிரபலமான சோனியன் புங்கமர காடுகளின் ஒரு பகுதிதான்.
முதல் உலகப் போர் நடந்தபோது சக்தியான ஆயுத பிரயோகிப்பால் இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
ஆனாலும், அதன் சிறப்பு கருதி 1930 லிருந்து 1950 வரையிலான காலங்களில் அங்கு வளர்ந்த ஓக் மற்றும்
புங்கை மரங்களை மீண்டும் பெருமளவில் வளர்த்து ஓரளவுக்கும் உருவாக்கப் பட்டது.
புங்கை மரங்களை மீண்டும் பெருமளவில் வளர்த்து ஓரளவுக்கும் உருவாக்கப் பட்டது.
இப்போதும் முதல் உலகப்போரில் அந்த காடு அடைந்த பேரழிவின் தடயங்களை உணர முடியும்.
உலகப்போரை கடந்தும் நம் விழிகளோடு விளையாட காத்திருக்கும் இந்த ஊதா காட்டை பார்ப்பதன் மூலமே அதன் அழகை ஊர்ஜிதப் படுத்தலாம்.
உலகப்போரை கடந்தும் நம் விழிகளோடு விளையாட காத்திருக்கும் இந்த ஊதா காட்டை பார்ப்பதன் மூலமே அதன் அழகை ஊர்ஜிதப் படுத்தலாம்.