எலிஸபெத் டெய்லருடன் திலீப் நடிக்காததால் மகிழ்ந்த சாய்ரா !

பொலிவூட்டின் புகழ்பெற்ற மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமாரை ஹொலிவூட் திரைப்படங்களில் நடிக்குமாறு அழைப்பு விடுக்கப் பட்டதாகவும் தாஜ் மஹால் தொடர்பான
எலிஸபெத் டெய்லருடன் திலீப் நடிக்காததால் மகிழ்ந்த சாய்ரா !
திரைப்படத்தில் பிரபல ஹொலிவூட் நடிகை எலிஸபெத் டெய்லருடன் சகிதம் நடிக்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்படத்தில் திலீப் குமார் நடிக்காதமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் சாய்ரா பானு கூறியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தனது 93 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய நடிகர் திலீப் குமாருக்கு கடந்த 13 ஆம் திகதி இந்திய அரசினால் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த திலீப் குமாரின் புகழ் குறித்து ஹொலிவூட் திரையுலகினரும் அறிந்திருந்தனர்.

1962 ஆம் ஆண்டு வெளியான லோரன்ஸ் ஒவ் அரேபியா படத்தை இயக்கிய டேவிட் லீன் அப்படத்தின் ஷெரீப் அலி எனும் பாத்திரத்தில் திலீப்குமாரை நடிக்க வைப்பதற்கு விரும்பினராம்.
பின்னர் எகிப்திய நடிகரான ஒமர் ஷெரீப் அப்பாத்திரத்தில் நடித்தார்.

இது குறித்து திலீப் குமாரின் மனைவியான முன்னாள் நடிகை சாய்ரா பானு கூறுகையில், “ஹொலிவூட் படங்களில் நடிப்பதற்கு திலீப் குமார் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை.

தாஜ்மஹால் தொடர்பான திரைப்படத்தில் எலிஸபெத் டெய்லருடன் அவரை நடிக்க வைப்பதற்கும் விரும்பினார்கள். ஆனால், எலிஸபெத் டெய்லருடன் அவர் நடிக்காதமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அப்படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் போது அவர்களுக்கிடையில் ஏதேனும் நடந்திருந்தால் எனது நிலை என்னவாகி யிருக்கும்? நான் எங்கே போயிருப்பேன்? என சாய்ரா பானு கூறியுள்ளார்.

1966 ஆம் ஆண்டு திலீப் குமாரை நடிகை சாய்ரா பானு திருமணம் செய்து கொண்டார். அப்போது திலீப் குமாருக்கு வயது 44. சாய்ரா பானுவுக்கு 22 வயது.
1979 ஆம் ஆண்டு அஸ்மா என்பவரை திலீப் குமார் திருமணம்செய்தார். ஆனால் 1982 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings