ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது. அதே சமயம் சட்ட விதிகளின் படி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வரலாம்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியும். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு துணை நிற்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.