டீசல் காராக இருந்தால் 4 அல்லது 5 முறை ஹீட்டர் போட்டு விட்டு பின்பு ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஸ்டார்ட் செய்யும் போது ஆக்சிலரேட்டர் அதிகமாக கொடுக்கக் கூடாது.
இன்ஜின் ஸ்டார்ட் ஆன பிறகு மிதமான ஆக்சிலரேட்டரில் அல்லது 2 நிமிடம் வைத்து பின்பு காரை இயக்கலாம்.
ஹீட்டர் பழுதடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹீட்டர் பிளக் வேலை செய்ய வில்லை என்றால், இன்ஜினுள் வெப்பம் ஏற்படுவது தடைபடும்.
அதனால் ஸ்டார்ட் ஆக அதிக நேரம் ஆகும். பெட்ரோல் காரை குளிர் காலத்தில் ஸ்டார்ட் செய்யும் போது ஆக்சிலரேட்டரைக் கொடுக்காமல் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
ஆக்சிலரேட்டரைக் கொடுக்கும் போது இன்லெட் வழியாக குளிர்ச் சியான காற்று அதிக அளவில் செல்ல வாய்ப்பு இருப்பதால் இன்ஜின் ஸ்டார்ட் ஆக தாமதமாகும்.
சிலர் கார்புரேட்டர் வகை கார் வைத்தி ருப்பார்கள். அவர்கள் குளிர் காலத்தில் கார் ஸ்டார்ட் செய்யும் முன்பாக சோக் போட்டு விட்டு பின்பு ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
அதோடு சோக் பழுதாகாமல் இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும்.
வாயுவை எரிபொருளாக கொன்டு இயங்கும் கார் வைத்திருப்போர்கள், குளிர் காலங்களில் ஸ்டார்டிங் பிரச்சினை வராமல் தடுக்க
வாயு குளிர்ச்சியடைந்து உறைவதைத் தடுக்கும் திரவத்தை கேஸ் டேங்கில் போவதன் மூலம் வாயு வரும் குழாயில் அடைப்பு ஏற்ப டுவதைத் தவிர்க்க லாம்.
இதனால் ஸ்டார்டிங் பிரச்சினையும் வராது. குளிர் காலங்களில் தண்ணீர் ஆனது பனிக்கட்டியாக மாறும் தன்மை உள்ளதால்.
இன்ஜின் கூலன்ட் பகுதியில் கூலன்டுக்குப் பதிலாக தண்ணீர் ஊற்றக் கூடாது அவ்விதம் ஊற்றினால் கூலிங் சிஸ்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தெர்மோ ஸ்டார் வால்வு செயல் படுவதை உறுதி செய்வது நல்லது. ஏனென்றால் இன்ஜினின் உள்புற வெப்ப நிலையைச் சரியாக வைத்துக் கொள்ள உதவும்.
இதன் மூலம் ஸ்டார்டிங் பிரச்சினையைத் தவிர்க்கலாம். குளிர் காலங்களில் கார் உடனே ஸ்டார்ட் ஆக மிகவும் முக்கியமானது பேட்டரி தான்.
எனவே பேட்டரியில் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் ஸ்டார்டிங் பிரச்சி னையைத் தவிர்க்கலாம்.
இறால் ஃப்ரை செய்முறை !
குளிர் காலங்களில் மட்டும் நாம் கார் பயன்படுத்தவில்லை என்றாலும் தினமும் 5 அல்லது 10 நிமிடம் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைப்பதன் மூலம் பேட்டரியில் சார்ஜ் குறையாமல் இருக்கும்.
இதன் மூலம் ஸ்டார்டிங் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.