வலங்கைமானில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வளையமாபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 24).
இவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு வலங்கைமான் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட ராஜ லட்சுமியின் குடும்பத்தினருக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் குடும்ப பாதுகாப்பு நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்க அரசு உத்தர விட்டது.
இந்த உத்தரவு வெளிவந்து, 10 மாதங்கள் ஆன பிறகும் ராஜ லட்சுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட வில்லை.
ஆர்ப்பாட்டம்
இதை கண்டித்து வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதை கண்டித்து வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட தலைவர் தாயுமானவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கலியபெருமாள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதா, பால் வியாபாரிகள் சங்க ஒன்றிய செயலாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.