தன்னை அரசியலுக்கு அழைப்பு விடுத்து இயங்கும் இளைஞர்கள் இயக்கங்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வீடியோ வடிவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும் 6 நிமிட வீடியோ, சகாயத்தை அரசியலுக்கு அழைத்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சகாயம் கூறியிருப்பது:
"நானே உங்களோடு இத்தகைய பணிகள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.. நன்றி!
"கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.