நாய்க்கு எப்படி காற்சட்டை போடலாம்? விவாதம் !

1 minute read
நாய்க்கு எப்படி காற்சட்டை போடலாம் என்று கேட்டதும் நீங்கள் எங்கே என்று பதில் சொல்லுவீர்கள்? சிலர் இதைக் கேட்டதும், இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் இது எல்லாம் ஒரு விடயமா என்று நினைப்பார்கள். அப்படியல்ல.
நாய்க்கு எப்படி காற்சட்டை போடலாம்? விவாதம் !
இது இப்பொழுது உலக அளவில் விவாதிக்கப்படும் ஒரு கேள்வியாக உள்ளது. இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ள இந்த விவாதம், தற்பொழுது அதிகமானவர்கள் கருத்துக் கூறும் அளவுக்கு நீண்டுள்ளது. 

நாய்க்கு எப்படி பேண்ட் போடலாம்? அதன் பின்னங்கால்களை மட்டும் மறைக்கும்படியா?, அல்லது நான்கு கால்களையும் மறைக்கும் படியா? என்பதுதான் அந்த விவாதத்தின் கருப்பொருள்.

இந்த கேள்விக்கு இரு தரப்பினராக பிரிந்து தமது கருத்துக்களை சொல்லி வரும் இணையப் பாவனையாளர்கள், அதனை நிரூபிக்கும் வகையிலும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

நாய்க்கு எப்படி காற்சட்டை போடலாம்? விவாதம் !
அதில் ஒரு செயற்பாடாக, தங்கள் நாய்களுக்கு உடை அணிவித்து, அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர்.

அதில் தமக்கு வரும் சாதகமான கருத்துக்களை இந்த விவாதத்தில் குறிப்பிட்டுக் காட்டி, அது தான் சிறந்த முறை என்றும் வாதாடி வருகின்றனர். 

ஒரு நாய்க்கு உடை அணிவிப்பதில் இணையத்தில் இவ்வாளவு விவாதமா? சிலருக்கு இதனை நம்பவே முடியவில்லை போல
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings